பி.எல். சேர்க்கை : 53 மருத்துவர்கள் உள்பட10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மூன்றாண்டு (எல்எல்பி,) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு 53 மருத்துவர்கள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மூன்றாண்டு (எல்எல்பி,) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு 53 மருத்துவர்கள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இளநிலை சட்டப்படிப்பு சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பு, 3 ஆண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பு மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான சேர்க்கை இதுவரை நடந்து முடிந்துள்ளது. 
இப்போது அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான சேர்க்கை அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கட்- ஆப் மதிப்பெண்கள், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
53 மருத்துவர்கள்: இந்த 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 53 மருத்துவர்கள், 1,364 பி.இ., பட்டதாரிகள், 8,654 இளநிலை பட்டதாரிகள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டில் 6,500 பேர் மட்டுமே இந்த 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com