நீட் தேர்வு: 'ஹால் டிக்கெட்' எப்போது?

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இந்த வாரத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இந்த வாரத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6 -ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத உள்ளனர்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 9 -ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிலையில், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஏப்ரல் 2 -ஆம் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, 'நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்' என அவர்கள் தெரிவித்தனர். 
ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com