நீட் தேர்வு: இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்'

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
2018-2019-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 
கடந்த ஆண்டு 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஏப்ரல் 2-ஆம் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
ஆனால் திங்கள்கிழமை வரை அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) நீட் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சென்று, தங்களுடைய நீட் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com