இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்த IIFT 2018 எம்பிஏ நுழைவுத் தேர்வு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் டிரேட் (IIFT) IIFT எம்பிஏ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 2, 2018) இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்தது. 
இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்த IIFT 2018 எம்பிஏ நுழைவுத் தேர்வு

தேர்வுப் பருவம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் CAT 2018 மற்றும் IIFT ஆகியவற்றால் நிகழப்போவது! இந்த தேர்வு பற்றிக் கூறும் மாணவர்கள், இப்போது IIFT 2018 இன் பகுப்பாய்வைக் கவனிப்பதால், அதன் மீதான பரபரப்பு அதிகரிக்கும் என்றனர். எனவே இதன்மூலம் அவர்கள் தங்கள் சொந்த செயல்திறனை மதிப்பீடு மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை மதிப்பீடு செய்யலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் டிரேட் (IIFT) IIFT எம்பிஏ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 2, 2018) இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்தது. அவை தில்லி, அகமதாபாத், பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றன. தில்லி, கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய மையங்களில் இணைவதற்கான எம்பிஏ (ஐபி) 2019-21 பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இது, நாட்டின் முன்னணி எம்பிஏ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

பிற ஆன்லைன் எம்.பி.ஏ. தேர்வுகள் போலன்றி, எழுத்து அடிப்படையிலான (ஆஃப்லைன்) முறையில் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் IIFT தேர்வுக்கு 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பெருமைக்குரிய கல்வி மையத்தில் சேர்ந்து வருகின்றனர். கடுமையான செயல்முறை தேர்வு மற்றும் சிறந்த தேர்ச்சி பெற்ற பின்னர் தான் மாணவர்கள் இங்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

2018 தேர்வின் கடின நிலை, எதிர்பார்த்த பிரிவு-வாரியான மற்றும் ஒட்டுமொத்த கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சதவிகிதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு உதவக்கூடிய IIFT 2018 பகுப்பாய்வை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

IIFT 2018  தேர்வு முறை

OMR தாள்களில் பென்சிலைப் பயன்படுத்தி பதில்களைத் குறிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். IIFT எந்தவொரு கால அளவிலும் அனைத்து பிரிவுகளிலும் வித்தியாசமான தேர்வுத் திட்டத்தை பின்பற்றுகிறது. IIFT 2018 இன் தனிப்பட்ட பிரிவுகளை நிறைவு செய்வதற்கான மொத்த நேரம் சுமார் 30-45 நிமிடங்களாக இருக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் சுமார் 8-10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IIFT 2018: கட்-ஆஃப் தேவை

IIFT 2018 க்கான கட்-ஆஃப் மதிப்பெண்களானது, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கட்-ஆஃப் மதிப்பெண்கள், தேர்வின் கடின நிலை, சோதனைத் தேர்வுகளின் எண்ணிக்கையும், ஒழுங்குபடுத்தும் அமைப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது.

IIFT தேர்வு முறைக்கு ஒரு மாற்றத்தைச் சந்தித்ததில் இருந்து கேள்விகள் மற்றும் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது, மேலும் கேள்விகளின் வகை தவிர, IIFT 2018 வித்தியாசமான மற்றும் கடினமாக கேள்விகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முறை நான்கு பிரிவுகளுக்கு பதிலாக ஆறு பிரிவுகள் இருந்தன. VARC தனியாக சோதிக்கப்பட்டு மற்றும் மிகவும் கடினமானதாக மதிப்பிடப்பட்டது. ஆங்கில இலக்கணம், சொற்களஞ்சியம், சொற்றொடர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தர்க்கரீதியான மற்றும் தரவு ரீதியான பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு  DI கேள்விகள் மற்றும் LR கேள்விகளுக்கு ஈடுசெய்ய இயலாத விதம் அமைக்கப்பட்டிருந்தது. பொது அறிவுப் பகுதியும் கடினமாக அமைக்கப்பட்டிருந்து.

IIFT 2018 தேர்வு: ஒட்டுமொத்த பகுப்பாய்வு

1. கேள்விகளின் மொத்த எண்ணிக்கை 114 ஆக குறைக்கப்பட்டது.
2. IIFT 2018 தேர்வு ஆறு பிரிவுகள் பிரிக்கப்பட்டது. உதாரணம்: பொது விழிப்புணர்வு, வினைச்சொல் திறன், வாசிப்பின் புரிதல், அளவு திறன் மற்றும் தர்க்கரீதியான நியாயப்படுத்தல் மற்றும் தரவு விளக்கம்.
3. 120 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது, அதில், பேச்சுத்திறன் பிரிவு கடினமாக அமைந்தது. பெரும்பாலான தேர்வாளர்கள் 30 முதல் 40 சதவீதம் கேள்விகளைத் தாண்டி பதிலளிக்கவில்லை.
4. பொது அறிவுக் கேள்விகளை எளிதாக எதிர்கொள்வதில் பெரும்பாலான தேர்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
5. கடந்த 2017-ஆம் ஆண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இம்முறை அதிக சதவீதத்தை எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com