நிகழாண்டு நீட் தேர்வு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை: சிபிஎஸ்இ

நிகழாண்டு நடைபெற உள்ள நீட் தகுதித் தேர்வு பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
நிகழாண்டு நீட் தேர்வு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை: சிபிஎஸ்இ

நிகழாண்டு நடைபெற உள்ள நீட் தகுதித் தேர்வு பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பிற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இளநிலை எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்.
இந்த தகுதித் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை ஓரிரு நாள்களில் சிபிஎஸ்இ வெளியிட உள்ளது. இந்த நிலையில், அதற்கான பாடத் திட்டம் குறித்த அறிவிப்பை இப்போது வெளியிட்டள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே, 2018 ஆம் ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படும். எனவே, பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றுமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com