பிளஸ் 1 தமிழ் முதல் தாள்: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். 
பிளஸ் 1 தமிழ் முதல் தாள்: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். 
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றைப் போன்று பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கியது. 
இந்தத்தேர்வில் 8.61 லட்சம் தேர்வர்கள் 2,795 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வின் முதல் தேர்வாக தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. 
இந்தத் தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் குறித்து சென்னை சாய்மோகன், விஷ்ணு, தீபிகா உள்ளிட்டோர் கூறியது:
கடந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினோம். தற்போது 1 ஆண்டு இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்வை எதிர்கொள்வது சற்று புதிய அனுபவமாக இருந்தது. தமிழ் முதல் தாளில் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 20 ஒரு மதிப்பெண் கேட்கப்பட்டிருந்தன. 
அவற்றில் 7 வினாக்கள் பாடத்தின் உள்பகுதிகளிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்றுக் கடினமாகவே இருந்தன. இருப்பினும் மூன்று மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 9 வினாக்களும் எளிமையாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தமிழ் முதல்தாள் வினாத்தாள் ஓரளவுக்கு எளிமையாகவே இருந்தது என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com