நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவை வெளியானதைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிக்கும் வகையில் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி கடைசி என்றும், இணையதளத்தில் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 13-ஆம் தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நீட் தேர்வு இயக்குநர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை (மார்ச் 12) மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) இரவு 11 மணிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆன்லைனிலேயே மேற்கொள்வதற்கான நாள்கள் மார்ச் 15 முதல் 17-ஆம் தேதி வரை என மாற்றப்பட்டுள்ளது.
ஆதார் தேவையில்லை: விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான பகுதியில் ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com