இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10
இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழை (மார்ச்.16) முதல் தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 மாணவர்கள், 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 மாணவிகள், 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26 ஆயிரத்து 43 மாணவிகள் மற்றும் 24 ஆயிரத்து 713 மாணவர்கள் என 50 ஆயிரத்து 756 பேர் தேர்வு எழுதுகின்றனர். 

சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. ஆயிரத்து 67 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள்.

காப்பி அடித்தல், உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com