நீட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.30 கடைசி

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.
நீட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.30 கடைசி


இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.
https://ntaneet.nic.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கட்டணம்: இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது.
1.07 லட்சம் பேர்: கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com