பத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 

பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.25) வெளியிடப்படும் என்பதோடு, தற்காலிக


பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.25) வெளியிடப்படும் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 செப்டம்பர்- அக்டோபரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைப்பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மறுகூட்டல்: தேர்வுத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்டோபர் 26, 27 தேதிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இரண்டு தாள்கள் கொண்ட மொழிப் பாடத்துக்கு தலா ரூ. 305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுத்தாள் மறுகூட்டல் முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com