பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதி அறிவிப்பு - Dinamani - Tamil Daily News

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதி அறிவிப்பு

First Published : 01 January 2013 12:09 PM IST


பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 முதல் 27 வரையிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 27 முதல் ஏப்ரல் 12 வரையிலும் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான கால அட்டவணை தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்த இந்த அட்டவணைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். பொறியியல், மருத்துவப் பாடங்களில் சேருவதற்கான முக்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை இருக்கும் வகையில் பிளஸ் 2 அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல் பாடத் தேர்வுகளுக்கு முன்னதாக தலா 3 நாள்கள் விடுமுறையும், கணிதம், உயிரியல் பாடத் தேர்வுகளுக்கு முன்னதாக தலா 2 நாள்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல்  பிற்பகல் 1.15 மணி வரை)

மார்ச் 1 வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் முதல்தாள்

மார்ச் 4 திங்கள்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்

மார்ச் 6 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 11 திங்கள்கிழமை இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 14 - வியாழக்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ பயலாஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்

மார்ச் 15 வெள்ளிக்கிழமை வணிகவியல், ஹோம் சயின்ஸ்,புவியியல்

மார்ச் 18 திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்

மார்ச் 21 வியாழக்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

மார்ச் 25 திங்கள்கிழமை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தமிழ், ஆங்கிலம் தட்டச்சுத் தேர்வு

மார்ச் 27 புதன்கிழமை பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல், தொழிற்பாட மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு

மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதைப் படிக்க 10 நிமிடங்களும், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.தட்டச்சு தேர்வு மட்டும் 10 முதல் 12.30 வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரை)

மார்ச் 27 புதன்கிழமை -மொழிப்பாடம் -முதல் தாள்

மார்ச் 28 வியாழக்கிழமை -மொழிப்பாடம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1 திங்கள்கிழமை - ஆங்கிலம்  - முதல் தாள்

ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் - இரண்டாம் தாள்

ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை கணிதம்

ஏப்ரல் 8 திங்கள்கிழமை அறிவியல்

ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிஷங்களும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தலைமையாசிரியர்களின் கோரிக்கையை அடுத்து விவரங்களைப் பதிவு செய்ய கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து வழங்கிய பிறகு தேர்வு மையங்கள் அமைக்கும் பணி, ஹால் டிக்கெட் வழங்கும் பணி ஆகியவை தொடங்கும்.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.