டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 35

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும்
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 35

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி
2. சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி
3. வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி ஆண்டு
4. அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் - சனி
5. மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்
6. வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாய் - நைட்ரஜன்
7. மின்கலத்தை கண்டு பிடித்தவர் - அலெக்சாண்டரோ வோல்டோ
8. மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922
9. இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை  - 13
10. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்
11. ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து
12. மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா
13. அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)
14. இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி
15. இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்
16. உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது
17. ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்
18. ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750
19. சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா
20. சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்
21. 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்
22. தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி
23. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி
24. 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி
25. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்
26. சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி
27. நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்
28. ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்
29. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - விவசாயம்
30. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை
31. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - வறுமை ஒழிப்பு
32. ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969
33. 'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
34. தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக  நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013
35. 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா
36. உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981
37. உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்
38. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 2005
39. உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19
40. உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்
41. யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)
42. மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்
43. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்
44. சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி
45. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்
46. நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்
47. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976
48. 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்
49. ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)
50. இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com