தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் தமிழ்நாடு தொழிற்சார்நிலைப் பணியின் கீழ்வரும் உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் தமிழ்நாடு தொழிற்சார்நிலைப் பணியின் கீழ்வரும் உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதி வாந்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். 01/2017

பணி: உதவி பட்டு ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினரை தவிர மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தகுதி: பட்டு வளர்ப்பை முதன்மை பாடமாக கொண்ட இளம் அறிவியல் (B.Sc., Sericulture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்படும் நபர்களும் பட்டு வளர்ச்சித்துறையின் www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.200. எந்த பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பவில்லை. கட்டணத்தை இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, என்ற பெயரில் சேலத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, சேலம் அலுவலகத்தில் நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2017

தேர்வு நடைபெறும் தேதி: 10.09.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, அஸ்தம்பட்டி, சேலம் - 636 007

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnsericulture.gov.in/SericultureNov12/AIS-Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com