வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 81 லட்சம்

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 81.71 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த எண்ணிக்கையை தமிழக அரசு இணையதளத்தில்

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 81.71 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த எண்ணிக்கையை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஜூன் 30 -ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரங்கள்: 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 21 லட்சத்து 9 ஆயிரத்து 926 பேரும், 18 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவ -மாணவிகள் 21 லட்சத்து 66 ஆயிரத்து 31 பேரும் தங்களது பள்ளி, பட்டப் படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், 24 முதல் 35 வயது வரை உள்ள படித்து முடித்து அரசுப் பணி வேண்டி காத்திருக்கும் வேலை தேடுவோர் 28 லட்சத்து 91 ஆயிரத்து 275 பேரும், 35 வயது முதல் 56 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 10 லட்சத்து 4 ஆயிரத்து 531 பேரும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 57 வயதுக்கு மேற்பட்டோர் 5 ஆயிரத்து 709 பேர் இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
மொத்தம் 81 லட்சத்து 71 ஆயிரத்து 472 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது படிப்புகளைப் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com