விண்ணப்பித்துவிட்டீர்களா...? வேலை...வேலை...வேலை...

குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துவிட்டீர்களா...? வேலை...வேலை...வேலை...

பரோடா வங்கியில் வேலை
பணி: 
1. Group Head - 04 
2. Operations Head - 01 
3. Territory Head - 25 
4. Senior Relationship Manager - 223 
5. Acquisition Manager (Affluent) - 41 
6. Client Service Executive - 43 
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 8.12.2017 தேதியின்படி 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், எக்கனாமிக்ஸ், எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்புகளைப் படித்து தெரிந்து விண்ணப்பிக்கவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 8.12.2017

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
பணி: Junior Administrative Assistant 
காலியிடங்கள்: 03
தகுதி: குறைந்தபட்சம் 10, +2 முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: 
Chairman/Principal District Judge,
District Legal Services Authority,
Combined Court Building, 
Coimbatore - 641 018
மேலும் விவரங்களுக்கு: http://www.ecourts.gov.in/sites/default/files/legal%20aid%20notification.pdf என்ற இனையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.12.2017

நவோதயா பள்ளிகளில் வேலை
பணி: ஸ்டெனோகிராபர் 
காலியிடங்கள்: 426
பணி: லேப் அட்டன்ட்
காலியிடங்கள்: 77
பணி: ஸ்டாப் நர்ஸ்(பெண்) 
காலியிடங்கள்: 81
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், +2 படிப்புடன் தட்டச்சு, நர்சிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், பட்டதாரிகள், ஆங்கிலம், ஹிந்தியில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் அவரவர் தகுதிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.nvshq.org/uploads/1notice/Recruitment_NVS_Advertisement_Recruitment_2017-1510305145.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2017

இந்து அறநிலையத்துறையில் வேலை
பணி: Executive Officer, Grade-1
காலியிடங்கள்: 4 
வயதுவரம்பு: 30 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_25_EO_Grade_I_Notfn.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2017

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை
பணி: Graduate Engineer (Civil)
காலியிடங்கள்: 80
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://english.bmrc.co.in/FileUploads/b6f626_CareerFiles.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2017

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் வேலை
பணி: Deputy Secretary/Regional Director
காலியிடங்கள்: 4 
பணி: Section Officer/Programme Officer
காலியிடங்கள்: 2
பணி: Accounts Officer
காலியிடங்கள்: 01
பணி: Computer Programmer-Cum-Planing & Monitoring Officer (CPPMO)
காலியிடங்கள்: 1
பணி: Librarian-Cum-Documentation Officer (LDPO)
காலியிடங்கள்: 01
பணி: Junior Accounts Officer
காலியிடங்கள்: 5
விண்ணப்பிக்கும் முறை: www.ncte-india.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி:
National Council for Teacher Education
Wing. II, Hans Bhawan, 1, Bahadur Shah Zafar Marg,
New Delhi-110 002.
மேலும் விவரங்களுக்கு: http://ncte-india.org/ncte_new/pdf/Advertiesment_Vacancy_2017_and_Vacancy_Circular.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.12.2017


தேசிய உர நிறுவனத்தில் வேலை
பணி: ENGINEER 
1. CHEMICAL - 25
2.MECHANICAL -15 
3. ELECTRICAL - 06 
4. INSTRUMENTATION-04 
5. CIVIL - 04
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: MANAGER - ELECTRICAL - 08
பணி: SR. MANAGER - MATERIALS  - 03 
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவில் பி.எஸ்சி., எம்.பி.ஏ. மற்றும் பி.இ., பி.டெக். படிப்புகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள். 
விண்ணப்பிக்கும்முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைன் விண்ணப்ப நகலை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Deputy General Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh - 201301
மேலும் விவரங்களுக்கு: http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/TEP_FINAL.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2017 
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசித் தேதி: 27.12.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com