இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா..? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்..!

இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா..? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்..!

பொது துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள "Security Guard Cum Peon" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள "Security Guard Cum Peon" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Guard Cum Peon

காலியிடங்கள்: 44

வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முப்படைகள் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: நிமிடத்திற்கு 11 முறை 5 மீட்டர் தூரம் Shuttle அடிக்கும் திறனும், Push ups:13; Sit ups: 20 முறை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறந் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாடு, புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றிதழ் அட்டெஸ்ட் செய்து விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விண்ணப்பத்தாரர்கள் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப கவரின் மீது "Application for the post of Security Guard Cum Peon 2017-2018" என்று குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தமிழ்நாடு: The Chisf Manager, HRM Department, Indian Bank, Corporate Office, 254-260, Avvai Shanmugam Salai, Rayapettah, Chennai-600 014.

புதுச்சேரி: The Chief Manager, HRM Department, Indian Bank, Zonal Office Puducherry, 66/4, East Coast Road, Pakkamudayanpet, Puducherry-605008.

பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.12.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com