ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை நிரப்ப விரைவில் தேர்வு அறிவிப்பு

ரயில்வேயில் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை நிரப்ப விரைவில் தேர்வு அறிவிப்பு

புதுதில்லி: ரயில்வேயில் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவதற்கென அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று புதன்கிழமை பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில் தில்லியை தலைமையிடமாகக் கொண்ட வடக்கு ரயில்வே மண்டலத்தில் 27 ஆயிரத்து 537 காலிப் பணியிடங்களும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு ரயில்வேயில் 19 ஆயிரத்து 942 காலிப் பணியிடங்களும், மத்திய ரயில்வேயில் 19 ஆயிரத்து 651 பணியிடங்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களும் உள்ளன. 
நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மொத்தம் 41,128 வேலை வாய்ப்புகள் உள்ளன.

ரயில்வேயில் புதியவர்கள் சேர்க்கைக்கு இணையான ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை இருப்பதே காலிப் பணியிடங்கள் குறையாமல் இருக்கக் காரணம் என்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஒரு தொடர்ச்சியான செயலாகும். இதில் காலியிடங்கள் ஏற்படுவதற்கான கால இடைவெளிகளுக்கு இடையே எப்போதும் கால அவகாசம் உள்ளது. இது காலியிடங்களை அறிவித்தல், தேர்வுகள் நடத்துதல் போன்றவைகள் மூலம் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை ரயில்வே தேர்வாணையம் என்ற அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன என கோயல் கூறினார்.

மேற்கண்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com