ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 19

நகைச்சுவை உணர்வு மட்டும் தமக்கு இல்லாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ தன் வாழ்க்கையை இழந்திருக்கக் கூடும்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 19

- தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது - வானியல் ஆய்வு
- தமிழன் தோன்றிய இடம் - குமரிக் கண்டம்
- உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
- உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ் குரலுக்கு உரியவர் - வள்ளுவர்.
- வானவெளியில் உள்ள மிகப்பெரிய விண்மீன் - ஞாயிறு

- தாமே ஒளிவிடக் கூடியவை நாள்மீன் எனப்பட்டன.
- சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உலகம் உருண்டை எனும் அறிவு.
- ஞாயிறிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக் கூடியவை கோள்மீன் எனப்பட்டன.
- மன்னிப்பு என்னும் உருது சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் பொறுத்துக் கொள்க.
- அறிவன் என்னும் சொல் - புதனைக் குறிக்கும்.

- தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் - கால்டுவெல்.
- தனித் தமிழுக்கு வித்திட்டவர் - பரிதிமாற் கலைஞர்.
- தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்
- தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செயதவர் - தேவநேயப் பாவாணர்.
- செந்தமிழிச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள் பெற்றவர் - தேவநேயப்பாவாணர்.

- தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்கவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர் - பாவாணர்.
- சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக பணியாற்றியவர் - பாவாணர் (08.01.1974)
- எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய தன்மானச் சிங்கம் பாவாணர்.
- சென்னையில் பாவாணர் பெயரில் நூலகம் உள்ளது.
- பாவாணர் கோட்டம், உருவச்சிலை, நூலகம் ஆகிய மூன்றும் அமைந்துள்ள இடம் - முறம்பு

- மதுரையில் (05.01.1981) உலகத்தமிழ் மாநாட்டில் மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர் - பாவாணர்.
- பாவாணரின் பெற்றோர் ஞானமுத்து-பரிபூரணம். ஊர் - சங்கரன் கோவில்.
- பழந்தமிழ் இலக்கண நூல் - தொல்காப்பியம்
- உலகில் அதிக மழைபெறும் இடம் - சிரபுஞ்சி
- அக்டோபர் முதல் வாரம் - வானவிலங்கு வாரம்.

- வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1972
- வனவிலங்கு உலக நாள் - அக்டோபர்-4.
- தேசிய வனவிலங்கு பூங்கா - 66 இடங்கள்
- வனவிலங்குப் புகலிடங்கள் - 368
- வனவிலங்குப் பாதுகாப்பு இடங்கள் - 17 இடங்கள்.

- ஓரறிவு உயிர் - மெய்யுணர்வு - புல், மரம், முதலிய தாவரங்கள்.
- ஈரறிவு உயிர் - மெய், கண் - நந்தை, சங்கு
- மூவறிவு உயிர் - மெய், வாய், மூக்கு - எறும்பு, கரையான், அட்டை
- நாலறிவு உயிர் - மெய், வாய், மூக்கு, கண் - நண்டு, வண்டு, தும்பி
- ஐயறிவு உயிர் - மெய், வாய்,மூக்கு, கண், செவி - விலங்கு, பறவை

- ஆரறிவு உயிர் - மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம் - மனிதர்.
- இலக்கிய சுவைகளில் மிகவும் நுட்பமானது - நகைச்சுவை
- எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய 4 காரணங்களால் தோன்றுவது - நகைச்சுவை
- நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகவே தோன்றும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
- நகைச்சுவை உணர்வு மட்டும் தமக்கு இல்லாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ தன் வாழ்க்கையை இழந்திருக்கக் கூடும் என்று கூறியவர் - காந்தியடிகள்.

- மருமக்கள் வழி மான்மியம் என்னும் நகைச்சுவைக் களஞ்சியத்தை இயற்றியவர் - கவிஞர் தேசிய விநாயகம்
- மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழியை மூலமொழி என்பர்.
- இந்தியாவை மொழிகளின் காட்சி சாலை எனக் குறிப்பிட்டவர் - ச.அகத்தியலிங்கம்
- ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழி - கிளைமொழி
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் - கால்டுவெல்

- தமிழிலுள்ள மிக பழைமையான நூல் - தொல்காப்பியம்
- இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் 325 மொழிகள் பேசப்படுகின்றன.
- திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் - குமாபிலபட்டர்.
- திராவிட மொழிகளுள் தொன்மையான பண்பட்ட மொழி - தமிழ்
- காந்தியக் கவிஞர் - நாமக்கல் கழிஞர்

- உவமைக் கவிஞர் - சுரதா
- புதுக்கவிதையில் வளர்ச்சியில் வல்லிக் கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
- உரைநடைக்காலம் - இருபதாம் நூற்றாண்டு.
- வால்விட்மனின் சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதினார்.
- மணிக்கொடி இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் - ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன்.

- எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் - எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா.
- கடல் பயணத்தை முந்நீர் வழங்கமெனக் குறிப்பிடும் நூல் - தொல்காப்பியம்.
- கடலில் செல்லும் பெரிய கப்பல் - நாவாய் எனப்படும்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் சங்கச்சாலையும், கலங்கரை விளக்கமும் இருந்தன.
- சேர நாட்டின் துறைமுகம் - முசிறி

- சோழ நாட்டின் துறைமுகம் - காவிரி பூம்பட்டினம்
- பாண்டிய நாட்டின் துறைமுகம் - கொற்கை
- முசிறி துறைமுகத்தில் யவனர்கள் பொன்னைத் தந்து அ்தற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்ற செய்தியைக் கூறும் இலக்கியம் - அகநாநூறு.
- பாண்டிய நாட்டு கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் சிறப்பாக நடந்ததாக கூறியவர் வெனிசு நாட்டறிஞர் - மார்க்கோபோலோ.


தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com