2017-ஆம் ஆண்டின் விருதுகள்

சர்வதேச அளவில் இசைத் துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது, அமெரிக்க செல்லோ இசைக் கலைஞர் யோயோ மா மற்றும் இந்திய தபேலா இசைக் கலைஞர் சந்தீப் தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2017-ஆம் ஆண்டின் விருதுகள்

பிப். 13: சர்வதேச அளவில் இசைத் துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது, அமெரிக்க செல்லோ இசைக் கலைஞர் யோயோ மா மற்றும் இந்திய தபேலா இசைக் கலைஞர் சந்தீப் தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மார்ச் 1: திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஜி.பூரணசந்திரனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய "சீனியர் மேன்' என்ற நூலை "பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற தலைப்பில் அவர் மொழிபெயர்த்திருந்தார்.
மார்ச் 25: சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த விமான நிலையம் என்ற விருது சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
ஏப். 7: "ஜோக்கர்' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது. கவிஞர் வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த "24' படத்துக்கு இரு தேசிய விருதுகள்.
ஏப். 13: பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு பத்ம விபூஷண் விருது. பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு மறைவுப் பின் பத்ம பூஷண் விருது.
ஏப். 19: எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது.
ஏப். 24: பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு 48-ஆவது தாதாசாஹேப் பால்கே விருது.
மே 2: இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு பெரியார் விருதை வழங்கினார் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.
ஆக. 14: சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிக்கான குடியரசுத் தலைவர் விருது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
ஆக. 15: தமிழகத்தைச் சேர்ந்த 19-வயதுக்குள்பட்ட மகளிர் அணி முன்னாள் வீராங்கனை பிரீத்தி சீனிவாசனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது. கை, கால்கள் செயல்படாத நிலையில் உள்ள இவர், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வருகிறார்.
அக். 2: அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு.
அக். 4: அல்சைமர் என்ற மூளை பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்த ஜாக்குவஸ் டுபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சட் ஹெண்டர்ஸன் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு.
அக். 5: ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸூவோ இஷிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
அக். 6: அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காக போராடி வரும் ஐ.சி.ஏ.என். தன்னார்வ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
அக். 9: அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தேலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
அக். 31: கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
டிச. 21: கவிஞர் இன்குலாபின் "காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமி விருது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com