பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை "செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான "செட்' தேர்வுக்கு பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம்.

பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான "செட்' தேர்வுக்கு பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மாநிலங்களில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் செட் தேர்வானது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 2016-ஆம் ஆண்டு "செட்' தேர்வு நடத்தப்பட்டது.
2017-ஆம் ஆண்டுக்கான "செட்' தேர்வும் அதே பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தேர்வு எப்போது?: ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட உள்ள தேர்வுக்கு ஆன்-லைனில் பிப்ரவரி 12 முதல் மார்ச் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அன்றைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், அபராதத் தொகையான ரூ.300-ஐ செலுத்தி மார்ச் 19 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மூன்று மடங்கு தேர்வுக் கட்டணம்: "நெட்' தேர்வுக்கு முன்னர் தேர்வுக் கட்டணமாக ரூ. 500-ஆக வசூலிக்கப்பட்டது. இப்போது ரூ.600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500-ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வுக்கு கடந்த ஆண்டைப்போலவே, மூன்று மடங்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பது விண்ணப்பதாரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com