தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்ட பணியகத்தில் பணி

மத்திய அரசு நிறுவனமான தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்ட பணியகத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட உதவியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்ட பணியகத்தில் பணி

மத்திய அரசு நிறுவனமான தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்ட பணியகத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட உதவியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: பெங்களூரு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: RA - 04
தகுதி: மண் அறிவியல், விவசாய இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.38,000
பணி: Senior Research Fellow (SRF) - 07
தகுதி: விவசாயியலில் முதுகலை பட்டம், மண் அறிவியல், விவசாயப் பொருளியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Project Assistant (PA) - 17
தகுதி: விவசாயம்,புவியியல், விவசாய புவியமைப்பியல் துறையில் பட்டம் அல்லது விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடத்தப்படும் இடம்: ICAR - NBSS & LUP, Hebbal, Bangalore
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.02.2017 அன்று காலை 10 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nbsslup.in/assets/uploads/clinks/job170116.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com