2016 காலச்சுவடுகள் ஒரு பார்வை...!

தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்விக் குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை
2016 காலச்சுவடுகள் ஒரு பார்வை...!

தேசியம்
ஜனவரி
1.    தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் குறைக்கும் வகையில் ஒற்றை - இரட்டை முறை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஒற்றை, இரட்டை எண்களின் அடிப்படையில் கார்கள் தரம் பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
2.    பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
4.    மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (6.7 ரிக்டர்) 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
17.    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா (26) தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
21.    வணிக வளாகக் காவலாளியை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த புகையிலை தொழிலதிபர் முகமது நிஷாமுக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து திருச்சூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
24.    பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி
1.    எல்லைப் பாதுகாப்பு ஆயுதப் படைப் பிரிவின் முதல் பெண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
5.    குஜராத் மாநிலம், நவுசாரி மாவட்டத்தில் உள்ள பூர்ணா ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலியானார்கள்.
8.    இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க சிறையில் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.
13.    பாகிஸ்தானுக்கு எஃப்-17 ரக போர் ஜெட் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது.
15.    நிதி முறைகேடு தொடர்பாக விஷ்வ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் சுஷந்த தத்தா குப்தாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
15.    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி ஜாட் சமூகத்தினர் ஹரியாணாவில் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டார் படுகாயமடைந்தனர்.
19.    அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலிக்கோ புல், மாநில முதல்வராக பதவியேற்றார்.
25 .   1993-ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.

மார்ச்
1    பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் "தேரி' நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸôர் தாக்கல் செய்தனர்.
11    மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது.
14    நிதி மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சஜ்ஜன் புஜ்பலை அமலாக்கத் துறை கைது செய்தது.
14    ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
27    உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல்
3    மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உள்ள மகுந்த்பூரில் வெள்ளைப் புலிகளுக்கான சரணாலயத்தை முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் திறந்து வைத்தார்.
4    உத்தரப் பிரதேசத்தில் 1991-ஆம் ஆண்டு சீக்கிய யாத்ரீகர்கள் 10 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 47 போலீஸôருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
5    மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட "2016-ஆம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில்', பொறியியல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி-மெட்ராஸ்) முதலிடம் பிடித்துள்ளது.
5    பிகார் முழு மதுவிலக்கு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும், அருந்தவும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு தடை விதித்தது.
10    கேரள மாநிலம், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில், வாண வேடிக்கையின்போது நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி 110 பக்தர்கள் உயிரிழந்தனர். 400 பேர் காயமடைந்தனர்.
11    எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்வதாக பிறப்பித்த முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
21    மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகே உள்ள திரியம்பகேஸ்வரர் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், மகளிர் அமைப்பச் சேர்ந்த 3 பெண்கள், கோயில் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.

மே
1.    5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் தொடக்கி வைத்தார்.
10.    உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
13.    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லை என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது இறுதி அறிக்கையில் தெரிவித்தது.
18.    குஜராத் மாநிலத்தில் 59 கரசேவகர்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஃபரூக் முகமது பனாவை பயங்கரவாதத் தடுப்புப் படையினர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.
22.    இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான கிரண் பேடி, புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
23.    ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா-ஈரான் இடையே பிரமதர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி முன்னிலையில் கையழுத்தானது.

ஜூன்
2    குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 36 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
10    தொழிலதிபர் விஜய் மல்லையா, அவருடைய "யுனைட்டெட் புரூவரிஸ்' நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
17    இந்திய விமானப் படையில் முதல் முறையாக போர் விமானங்களில் 3 பெண் விமானிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நியமித்தார்.
22    20 செயற்கைக்கோள்களுடன் "பிஎஸ்எல்வி-சி34' ராக்கெட்டை ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ ஏவி சாதனை படைத்தது.

ஜுலை
1    இந்தியாவிலேயே முழுக்க, முழக்கத் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான "தேஜஸ்', விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
5    மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, இலாகா மாற்றப்பட்டு ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
7    கங்கையைத் தூய்மையாக்கும் திட்டம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. மொத்தம் 7 மாநிலங்களில் 231 திட்டங்களைச் செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்.
8    ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் கட்டற்ற வன்முறை வெடித்தது.
17    அருணாசலப் பிரதேச அரசியல் சூழலில் புதிய திருப்பமாக, ஆளும் காங்கிரஸ் அரசின் புதிய முதல்வராக 37 வயது நிரம்பிய பெமா காண்டு பொறுப்பேற்றார்.
27    சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். அரசியலில் களமிறங்கப் போவதாகவும் அறிவித்தார்.

ஆகஸ்ட்
3    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. அதிமுக எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
4    இஸ்லாமாபாதில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
5    முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜிநாமாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்றுக் கொண்டார்.
11    மகப்பேறு விடுமுறைக் காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
15    இந்தியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பயங்கரவாதிகளை காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
20     அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை (கோட்) வைர வியாபாரி ஒருவர் ரூ.4.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கினார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
29    மேற்கு வங்க மாநிலத்தை "வங்கம்' எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


செப்டம்பர்
1    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்தரிகை தாக்கல் செய்தது.
8    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வரலாற்றில் முதன்முறையாக, இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
16    அருணாசலப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக அந்த மாநில முதல்வர் பெமா காண்டு உள்பட 43 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸிலிருந்து விலகி, அருணாசல் மக்கள் கட்சியில் இணைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி ஆட்சி அமைத்தது.
18    ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல்வேறு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்தது.
29    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர்
8    செகந்திராபாதில் சமண மதத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஆராதனா என்பவர் உணவு, குடிநீர் இன்றி 68 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் உயிரிழந்தார்.
14    பணி நியமன ஊழல் விவகாரத்தில் சிக்கியதால், கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
.24    ஒடிஸாமாநிலம், மால்காங்கிரி மாவட்டத்தில் ஆந்திர போலீஸôரும், ஒடிஸாபோலீஸôரும் கூட்டாக நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில், 11 பெண்கள் உள்பட 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
24    மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
31    சிறையில் இருந்து தப்பிச் சென்ற சிமி பயங்கரவாதிகள் 8 பேர் மத்தியப் பிரதேச போலீஸôரால்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நவம்பர்
8    கருப்புப் பண புழக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாதது தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
9    அமெரிக்க செனட் சபை உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியரான கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
11    சட்லெஜ் இணைப்புக் கால்வாய் திட்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
20    கான்பூரில் இந்தூர்-பாட்னா இடையேயான விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 146 பயணிகள் உயிரிழந்தனர்.
30    திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிசம்பர்
7    இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி-சி36 விண்கலம் மூலம் 1,235 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ்சாட் -2ஏ செயற்கைக்கோளை ஏவி சாதனை படைத்தது.
9    சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 3 பேரை சிபிஐ கைது செய்தது.
9    2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கைத் தாக்கல் செய்தார்.
14    மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
14    கர்நாடக மாநில கலால்துறை அமைச்சராக இருந்த ஹெச்.ஒய். மெத்தி, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
15    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
16    சூரியஒளி மின்தகடு ஊழல் வழக்கில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
17    இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விபின் ராவத் நியமிக்கப்பட்டார்.
19    ஹைதராபாத் தில்சுக்நகர் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான 5 பயங்கரவாதிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
22    தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் திடீர் ராஜிநாமா.

தமிழகம்:

ஜனவரி
8    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்க இயக்குநரகம், 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
11    தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட சீமென்கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துகுடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.87.42 கோடியில் கட்டப் ட்ட 292 கட்டடங்கள், 6 அம்மா மருந்தகங்கள், 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள், 13 பண்ணை பசுமை கடைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
12    மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மீண்டும் தடை விதித்தது.
30    சென்னை மாநகராட்சியை, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதனை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி
8    108 ஆம்புலன்ஸ் சேவையே மேலும் மேம்படுத்தும் வகையில் ரூ. 70 லட்சம் மதிப்பில் 41 மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13    சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஏழை மக்களும் வாங்கிப் பருகும் வகையில் அம்மா குடிநீர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
18    சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
20    தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
21    சட்டப்பேரவையில் தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர்  அந்தஸ்தை இழந்தார்.
மார்ச்
1    அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
5    தனியார் பள்ளிகளில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல்
 1    முறைகேடு வழக்கில் கிரானைட் அதிபருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு: மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரபூபதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
4    தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து.
10    சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, இலவச இணைய சேவை உள்பட 100 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
14    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "வெளிச்சம்' தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
23    தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், திமுக முன்னாள் அமைச்சர்  செல்வராஜ் ஆகியோர் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
26    பள்ளிகளில் திருக்குறள் கட்டாயப் பாடம்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
26    ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது சென்னை செஷன்ஸ் நீதிமன்றம்.
மே
1    சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அசுதோஷ் சுக்லா நியமனம்.
7    புற்று நோய் மருத்துவ நிபுணர் ரோஹிணி பிரேம்குமாரி (67) எழும்பூர் காந்தி-இர்வின் சாலையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
13    "கன்யாகுமரி' என்ற ஊரின் பெயர் ஏற்கெனவே அரசிதழில் இருந்தபடி "கன்னியாகுமரி' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
14    திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
16    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு; 74 சதவீத வாக்குகள் பதிவு.
17    கோடை வெப்பம் தணிந்து தமிழகத்தில் பலத்த மழை சென்னையில் 127 மி.மீ. மழை பதிவாகியது.
19    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியீடு. மீண்டும் அதிமுக வெற்றி.
19    திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராக 13-ஆவது முறையாக வெற்றி. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
20    சட்டப்பேரவை அதிமுக தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.
25    தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்  உள்பட 5 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.
31    காசோலை மூலம் வங்கிப் பணத்தை மோசடி செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2.40 கோடி அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜூன்
1    பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் சீருடைகளை வழங்கி தொடக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
8    தமிழக தலைமைச் செயலாளராக பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அந்தப் பதவியிலிருந்த கே.ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
20    கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
21    வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளைக் கடத்தியதாக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளனை போலீஸார் கைது செய்தனர்.
25    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக் கொண்டார்.
25    தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்விக் குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி ரூ.82 கோடியை பறிமுதல் செய்தனர்.
28    காரைக்கால் ஐ.டி.நிறுவன ஊழியர் வினோதினி மீது திராவகம் வீசிக் கொன்ற இளைஞர் சுரேஷ்குமாருக்கு காரைக்கால் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
ஜூலை
13    8 ஆண்டுகளாக பல கட்ட விசாரணையில் இருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கி வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
19    சோலார் மின்தகடு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயருடன் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் ஊழலில் தொடர்பு என்ற தகவல் வெளியானது.
22    இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 என்ற விமானம் சென்னையிலிருந்து 29 பேருடன் அந்தமானுக்கு பயணிக்கும் வழியில் மாயம்.
24    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் "வைஃபை' சேவை அறிமுகம். முதல்முறையாக ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே மனித கழிவுகளற்ற பசுமை வழித்தடம் தொடக்கம்.
27    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவாக 7 அடி வெண்கலச் சிலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு.
ஆகஸ்ட்
1    மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்---அதிமுக பொதுச் செயலரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு
9    சேலத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு சென்னை வந்த ரயிலில், பெட்டியின் மேற்கூரையை உடைத்து ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
10    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-ஆவது யூனிட்டை பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
12    25 மாவட்டங்களில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு 80 பாலங்கள், 142 கிமீ மாநில சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.900 கோடி அறிவிப்பு.
15    70-ஆவது சுதந்திர தின விழாவில் சண்முகம், ஜெயந்தி ஆகியோருக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவிப்பு.
17    சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட 79 பேரை 1 வாரத்துக்கு தாற்காலிக நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவு.
26    பெண்கள் முன்னேற்ற நல்லெண்ணத் தூதராக திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷை ஐ.நா. சபை அறிவித்தது.
செப்டம்பர்
1    ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கென ரூ. 403 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
2    மகாராஷ்ட்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பு.
7    சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே ராஜேந்திரன் டிஜிபி ஆக பொறுப்பேற்பு. மீண்டும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் பொறுப்பேற்பு.
9    விவசாய நிலங்களை அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றவும், மாற்றிய வீட்டு மனைகளுக்கு பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் பத்திரப் பதிவுத் துறைக்கு அதிரடி உத்தரவு.
12    முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, கீர்த்திலால் ஆகியோரது வீடுகள்,  நகை கடை உள்ளிட்ட 40 இடங்களில்  வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை.
15    மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிப்பு.
16    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக சு.திருநாவுக்கரசர் பொறுப்பேற்பு.
18    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை.
21    மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான இரண்டாம் வழித்தடத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
22    காய்ச்சல் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
25    முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என அறிவிப்பு.
30    முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல் சென்னை வருகை.
அக்டோபர்
5    சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் முன்னிலையில் 15 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது.
11    முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருடைய இலாகாக்களை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களையும் அவரே நடத்துவார். ஜெயலலிதாவே முதல்வராக நீடிக்கிறார் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
13     சென்னை குடிநீர் வாரியத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்து ஏற்படுத்தியதில், கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14    மூலிகை பெட்ரோல் தயாரித்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் பெட்ரோலியப் பொருள்களின் கலவையையை மூலிகை பெட்ரோல் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி ரூ.2.27 கோடி சம்பாதித்தது உறுதி செய்யப்பட்டது.
20    சிவகாசி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அருகில் இருந்த ஸ்கேன் மையத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
21    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக திமுக ஆட்சியில் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுவிக்கப்பட்டார்.
நவம்பர்
2    சென்னை மெளலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு 2014-ஆம் ஆண்டு இடிந்து விழுந்து பலரைப் பலி கொண்ட சம்பவத்தில், தொடர்புடைய மற்றொரு 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு நவீன முறையில் இடித்துத் தகர்க்கப்பட்டது.
5    ஒப்பந்தக்காரரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
10    6 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் எதிர்த்துப் போராடிய, மீத்தேன் மற்றும் பாறை எரிவாயு திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
16    சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஆர்.எம்.டி.டீக்கா ராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாய் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
21    பல மாதங்களாக தலைமறைவாக இருந்த திரைப்படத்  தயாரிப்பாளர் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
22    தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில்  அந்த மாநில முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
24    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் நிர்வாகியாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
டிசம்பர்
1    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்,  18 பேர் பலி.
5. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 6 முறை முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா(68), சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு, 75 நாள்களுக்குப் பின் மறைந்தார்.
6    அதிமுக மூத்த நிர்வாகியும், தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் (நள்ளிரவு 1 மணியளவில்) தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
8    மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் நாகரத்தினம், எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
9    6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
12    கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் தீவிரமான புயல் என்று கூறப்படும் வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. அப்போது 114 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 மாவட்டங்களில் 29 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.
12    மதுரை கிரானைட் ஊழல் வழக்கில் தொடர்புடைய ரூ. 528 கோடி மதிப்புள்ள சொத்துகள், 1625 அசையா சொத்துகள், நிரந்த வைப்புத் தொகை ஆகியவற்றை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
21    தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை,  அவரது மகன் விவேக், உறவினர் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய நோட்டுகள், 5 கிலோ தங்கம், ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
21    எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.
23    தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பினார்.
23    புதிய தமிழக தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்.
27    நான் தலைமைச் செயலராக நீடிக்கிறேன், தலைமைச் செயலகத்தில் நடத்திய  சோதனை  சட்டவிரோதமானது என்று முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ் பரபரப்பு பேட்டியளித்தார்.

உலகம்:

ஜனவரி
2     சவூதி அரேபியா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நெருக்கடி கொடுத்து வந்த ஷியா பிரிவு மதகுரு நிமர் அல் நிமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
6     வட கொரியா அரசு சிறியரக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக அறிவித்தது.
7     லிபியாவின் ஸிலிடன் நகரில் நிகழ்த்தப்பட்ட லாரி வெடிகுண்டு தாக்குதலில் 60 காவலர்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர் பலத்த காயமடைந்தனர்.
7      சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஈரான் அரசு தடை விதித்தது.
12    துருக்கி இஸ்தான்புல்லில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
16    தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்ற கழகத்தின்  தலைவர் சாய்-இங்வென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17    சர்வதேச அணுசக்தி கழகத்தின் விதிமுறைகளை   ஏற்றுக் கொண்டதையடுத்து ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
18    பாகிஸ்தானின் பலூச் மாகாண தேசியவாத தலைவர் நவாப் அக்பர் கான் புகட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷராப் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
20    துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிச் சென்றவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 20 குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரிழந்தனர்.
30    நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷிதா ராஜபட்ச கைதானார்.   
31    சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தற்கொலைப்படை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 110 பேர் காயமடைந்தனர்.

பிப்ரவரி
7     வட கொரியா, சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி  நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டை ஏவியது.
11     இயற்பியல்-வானவியல் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாக ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான முதல் நேரடி தடயத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.
15    சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷியா வான்வழித்தாக்குதல் நிகழ்த்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை பதிவு செய்தது.  
21    சிரியா தலைநகரில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
24    நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

மார்ச்
2    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத் நகரில் உள்ள இந்திய தூதகரத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி உள்பட மூன்றுபேர் உயிரிழந்தனர்.
6    இராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
15    மியான்மரில் 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ராணுவ பின்புலம் இல்லாதவரான ஹிடின் கியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20    90 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கம்யூனிஸ நாடான கியூபாவுக்கு   அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
22 பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மார்ச் 27: பாகிஸ்தானின் லாகூர் நகர பூங்காவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏப்ரல்
3    சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் "பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகின.
5    அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட 10 இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட 21 பேரை சட்ட அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
8    இந்தியாவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்வதற்காக ஊழலில் ஈடுபட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜியுசெப்பி ஓர்ஸிக்கு இத்தாலி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
16    ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8  என பதிவானது.
19    சிரியாவில் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திலிப் மாகாணப் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.  
21    பாலியல் அடிமைகளாக மாற மறுத்த 250 பெண்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.
27    கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறிய தெர்மாமீட்டரை உருவாக்கினர். இது, மனிதனின் தலைமுடியை காட்டிலும் 20,000 மடங்கு சிறியதாகும்.

மே
7     லண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் பதவியேற்றார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராவது இதுவே முதல்முறை.
9    வட கொரியா ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக கிம்-ஜோங் உன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
17    தென் கொரியாவைச் சேர்ந்த நவாலாசிரியர் ஹேன் கங்க் எழுதிய "தி வெஜிடேரியன்' நாவல் புக்கர் விருதை தட்டிச் சென்றது.
22    அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் நிகழ்த்திய அதிரடித்  தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
29    மத்திய தரைக்கடல் பகுதியில் 7 நாள்களில் 3 கப்பல்கள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் பலியானதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டது.

ஜூன்
6    காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான சிறுகதை போட்டியில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் பராசர் குல்கர்னி முதல் பரிசு வென்றார்.
7    மும்பையில் 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதை சீனா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.
9    மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
12    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் விருந்து நிகழ்ச்சியில், இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
30    இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்காக, ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்தது.

ஜூலை
3     இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 125 பேர் உயிரிழந்தனர்.
6    பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸூக்கு, காதலியை கொன்ற வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13    "பிரெக்ஸிட்' வாக்கெடுப்பு முடிவுகள் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரஸாமே பதவியேற்றார். பிரிட்டனில் பிரதமர் பதவியேற்கும் 2-ஆவது பெண் இவராவார்.
15    பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் சரக்கு லாரியை அதிவேகமாக செலுத்தி ஐ.எஸ். பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்
3     நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா இரண்டாவது முறையாக தேர்வானார்.
8    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.
12    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான ஹஃபீஸ் சயீத் கான், ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
24    இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 250 பேர் பலியாகினர்.
25    ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் "ரோபோ டாக்ஸி' சேவை, உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூரில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
26    இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் அதிநவீன "ஸ்கார்பீன்' ரக நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்கள், ஆஸ்திரேலிய ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர்
3    போர்க் குற்றங்களுக்காக, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.
4    வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், அன்னை தெரஸôவை புனிதராக பிரகடனப்படுத்தினார் போப் பிரான்சிஸ்.
17    ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய ஈராக் இளம்பெண் நாடியா முராத் பாஸி தாஹா (23), ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. தூராக நியமிக்கப்பட்டார்.
27    மரபியல் நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பதற்காக, தாய்-தந்தை மரபணுவுடன் மூன்றாவது ஒரு நபரின் மரபணுவையும் கருவில் இணைக்கும் புதிய மருத்துவ நுட்பத்தை பயன்படுத்தி முதல் ஆண் குழந்தை பிறந்தது.

அக்டோபர்
8    ஹைதி தீவில் "மேத்யூ' புயல் தாக்கியதில் 900 பேர் உயிரிழந்தனர்.
19    நண்பரை கொலை செய்த வழக்கில், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த துர்க்கி பின் சவூத் அல்-கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
20    வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
31    வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில், இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டதுடன், 15 ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நவம்பர்
 4    புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில், இந்தியா உள்ளிட்ட 96 நாடுகள் முறைப்படி இணைந்ததையடுத்து, அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
9    அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்காவின் 45ஆவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
25    கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90) மறைந்தார்.
28    கொலம்பியாவின் மெடில்லின் நகர் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரேசில் கால் பந்து அணியினர் உள்பட 81 பேர் உயிரிழந்தனர்.
29    பாகிஸ்தான் ராணுவ புதிய தலைமை தளபதியாக குவாமர் ஜாவத் பாஜ்வா பொறுப்பேற்றார்.
டிசம்பர்
1    தாய்லாந்து புதிய மன்னராக மஹா வஜிரலங்காரன் (64) பதவியேற்றார்.
7    பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே அந்நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.
12    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார் நியமிக்கப்பட்டார்.
19    அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான "தேர்வு செய்வோர் அவை' மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

கண்ணோட்டம் 2016 - தமிழ் சினிமா

ஜனவரி
1    மத்திய தணிக்கை குழு செயல்படுவதை கண்காணிக்க ஷியாம் பெனகல்   தலைமையில் மத்திய தணிக்கை குழு அமைப்பு. பின்னர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.  
23    நடிகை அர்ச்சனாகவி - அபிஸ்மேத்யூ திருமணம்.
28    நடிகர் நகுல் - ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நடைபெற்றது.
ஏப்ரல்
11    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது.  ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கும் இந்தப் படத்தில் சச்சினாக நடிக்க இருப்பது சச்சினேதான்.   சிறுவயது சச்சின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அவரது மகன் அர்ஜீன்.
 ஜூன்
5    பின்னணி பாடகர் பென்னி தயாள் - கேத்ரீன் திருமணம்.
 ஜூலை
14    தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
22    பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா ஆப்தே நடித்து வெளியான கபாலி படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
ஆகஸ்ட்
6    காதல் மணம் புரிந்து கொண்ட இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் விவகாரத்து பெற்றனர்.
 செப்டம்பர்
16    இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி இருவரும் விவகாரத்து பெற்றனர்.
22    இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் தமிழ் படமான விசாரணை இடம் பிடித்தது. பல ஆண்டு இடைவெளிக்குப் பின் ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படம் இது.
23    எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி  திரைப்படம்  தமிழில் வெளியாவதை முன்னிட்டு சென்னை வந்திருந்த கிரிக்கெட் வீரர் தோனி, படத்தில் நடித்த நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.
நவம்பர்
1    சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு பாராட்டி ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் - கௌதமி பிரிந்தனர்.
7    கன்னட பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் நடிகர்கள் அனில் மற்றும் உதய் இருவரும் விபத்துக்குள்ளாகி இறந்தனர்.
14    தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த நடிகர் விஷால் அச்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
25    நடிகை காவ்யாமாதவன் - நடிகர் திலீப் திருமணம்.
27    ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரையும் நீக்கி நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர்
23    ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவகாரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விளையாட்டு

ஜனவரி
4    பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா குழு, அமைச்சர்கள் பிசிசிஐ நிர்வாகிகளாக பதவி வகிக்கக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாகிகளாக இருக்க முடியாது,  ஒருவர் தொடர்ந்து 3 முறை நிர்வாகியாக இருக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை வழங்கியது.
5    மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே (15) என்ற சிறுவன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
9    பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, சானியா-மார்ட்டினா ஜோடி தொடர்ந்து வெல்லும் 6-ஆவது பட்டமாகும்
10    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன். சென்னை ஓபனில் அவர் வென்ற 4-ஆவது பட்டம் இது.  முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் அவர் பட்டம் வென்றிருந்தார்.
14    சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸôô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங்-ஷுவாய் பெங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 28 வெற்றிகளைப் பதிவு செய்த இந்த ஜோடி, ஃபெர்னான்டஸ்-நடாஷா ஸ்வெரெவா இணையின் சாதனையை சமன் செய்தது.
18     பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.
29    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, இந்த ஜோடி தொடர்ந்து வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அத்துடன், தொடர்ந்து 36 ஆட்டங்களில் வெற்றி பெற்ற பெருமையை இந்த ஜோடி பெற்றது.
30    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
31    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி பட்டம் வென்றார். இங்கு அவர் வென்ற 6-ஆவது பட்டம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர் ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.

பிப்ரவரி
14    இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மார்ச்
6    ஆசிய கோப்பை டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
8    ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.

ஏப்ரல்
3   டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

மே
10    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஆனதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சஷாங்க் மனோகர்.
17    2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில், 12 நாடுகளைச் சேர்ந்த 31 வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது.
29    2016-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூன்
4    சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி (74) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
12    ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், 2-ஆவது முறையாக பட்டம் வென்றார்.
23    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு வெளிநாட்டினரிடம் இருந்தது.
27    கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜூலை
9    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில்  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-ஆவது முறையாக பட்டம் வென்றார்.
10    யூரோ கோப்பை  கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தி பட்டம் வென்றது. போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
10    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார்.
24    இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்
6 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் இலங்கை வெற்றி கண்டது. இது, கடந்த 17 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி.
14 ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.
15     ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீரர் உசேன் போல்ட் 3-ஆவது முறையாக தங்கம் வென்றார்.
17    ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
18    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி  வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

செப்டம்பர்
10    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
11அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஜெர்மனி வீராங்கனை ஏஞ்ஜெலிக் கெர்பர் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார்.
12 பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
14 பாரா ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
25    டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர், சர்வதேச அளவில் 2-ஆவது வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். அவர் தனது 37-ஆவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அக்டோபர்
3    கொல்கத்தாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
11    நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
21    லோதா குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்கும் வரையில்பிசிசிஐ}மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப்பரிவர்த்தனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
30    மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
30    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றியாகும்.

நவம்பர்
20    சீனாவின் ஃபுஜௌ நகரில் நடைபெற்ற சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
21    பிசிசிஐ மறுசீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிசிசிஐ ஏற்க மறுப்பதாகக் கூறி, அதன் நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யுமாறு லோதா குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
30    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தி பட்டம் வென்றார்.

டிசம்பர்
2 ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியின் நடப்பு சாம்பியனான நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு.
12    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து க்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17    லோதா குழு பரிந்துரை அமல்படுத்தும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் (76) ராஜிநாமா செய்தார்.
18    ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
18    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது முறையாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியனானது.
19    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இது, ஒரு இன்னிங்ஸில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.
19     இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் (303*)  அடித்தார். அவருடைய முதல் சதமே முச்சதமாக அமைந்தது.
20    இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
22    2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் "சிறந்த கிரிக்கெட் வீரர்', "சிறந்த டெஸ்ட் வீரர்' ஆகிய விருதுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார்.
24    19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
27    ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் ஒடிஸாஅணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோயல் (26), 723 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தார்.


உதிர்ந்த மலர்கள்...

ஜனவரி
5: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா (68) காலமானார்.
7:ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது.(79) மறைந்தார்.
21:பிரபல நாட்டிய மேதை மிருணாளினி சாராபாய் (97) காலமானார்.
25. நடிகை கல்பனா (51) உடல் நலக்குறைவால் காலமானார்.

பிப்ரவரி
3: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மக்களவைத் தலைவருமான பல்ராம் ஜாக்கர் (92) காலமானார்.
9: நேபாள முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா மறைந்தார்.
28.நடிகர் குமரிமுத்து காலமானார்.

மார்ச்
4: மக்களவையின் முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா (68) காலமானார்.
21. சினிமா மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (89) உடல் நலக் குறைவால் மறைந்தார்.

ஏப்ரல்
6: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் மனைவி கமலா அத்வானி காலமானார்.
26: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) இணை நிறுவனர் அமானுல்லா கான் (82) மறைந்தார்.

மே
25:திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல் காலமானார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர் பதவியேற்புக்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜூன்
2. இயக்குநர் பாலு ஆனந்த் (62) காலமானார்.
15. பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக் குறைவால் காலமானார்.
18: கல்வியாளர் ஜேப்பியார் தமது 76-ஆவது வயதில் காலமானார்.

ஜூலை
27:கவிஞரும் எழுத்தாளருமான ஆர்.ரங்கநாதன் என்கிற ஞானக்கூத்தன் (78) காலமானார்.
28:கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மஹாஸ்வேதா தேவி (90) மறைந்தார்.

ஆகஸ்ட்
6: திரைப்பட கதாசிரியரும் இயக்குநருமான வியட்நாம் வீடு சுந்தரம் (76) மறைந்தார்.
9: மூத்த நடிகை ஜோதிலட்சுமி (63) மறைந்தார்.
9: மூத்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (76) மறைந்தார்.
14: திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41) காலமானார்.
22: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் 92-ஆவது வயதில் காலமானார்.

செப்டம்பர்
28: இஸ்ரேல் முன்னாள் அதிபரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஷிமோன் பெரஸ் (93) மறைந்தார்.

அக்டோபர்
13:தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (88) காலமானார்.

நவம்பர்
7:மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி (86) காலமானார்.
14: அதிமுகவின் மறைந்த மூத்த தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் (92) மறைந்தார்.
22:கர்நாடக சங்கீத மேதை எம். பாலமுரளிகிருஷ்ணா (86) மறைந்தார்.

டிசம்பர்
1:தமிழ்க் கவிஞர் இன்குலாப் (72) காலமானார்.
2: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி (87) மறைந்தார்.
5: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா(68) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
7: "துக்ளக்' பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர், வழக்குரைஞர் உள்பட பன்முகத்தன்மை கொண்டவரான சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் காலமானார்.
8: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சம்பத் (75) மறைந்தார்.

விருதுகள் - 2016

ஜனவரி
ஜனவரி 25: பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் ரஜினிகாந்த், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் விஸ்வநாதன் சாந்தா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது.
ஜனவரி 25: ராணுவத்தின் சிறப்புப் படையின் கமாண்டர் மோகன்நாத் கோஸ்வாமிக்கு அசோக சக்ரா விருது. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணடைந்தார்.
ஜனவரி 26: சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி உள்ளிட்ட பலரை வீரத்துடன் காப்பாற்றிய முகமது யூனுஸூக்கு குடியரசு தின விழாவில் விருது வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.

அக்டோபர்
அக்டோபர் 4: பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், ஹால்டென், காஸ்டர்லிஸ்ட் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 5: பிரான்ஸின் ஜீன் பியர் சொவாஜ், பிரிட்டனின் ஃபிராசர் ஸ்டூடர்ட், நெதர்லாந்தின் பெர்னாட் பெரிங்கா ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 7: 50 ஆண்டுகளாக நீடித்த கொலம்பிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அந்நாட்டு அதிபர் ஜுவன் மேனுவல் சான்டோஸூக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

மார்ச்
மார்ச் 2: மருத்துவர் சாந்தா மேனனுக்கு (92), தமிழக அரசின் ஒளவையார் விருது அறிவிக்கப்பட்டது.
மார்ச் 4: ஹிந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு (78) இந்திய திரைப்படத் துறையில் மிக உயரிய தாதா சாஹிப் பால்கே விருது அறிவிப்பு.
மார்ச் 28: 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. "பாகுபலி' சிறந்த திரைப்படமாகத் தேர்வு. தமிழில் "விசாரணை' திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது.
மார்ச் 28: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

ஜுன்
ஜுன் 16: தமிழ் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான லட்சுமி சரவண குமாரின் கானகன் புதினத்துக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது.

ஜூலை
ஜூலை 27: சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கர்நாடகத்தில் பிறந்த சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சன் ஆகியோருக்கு பிலிப்பின்ஸ் நாட்டின் ராமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்
ஆகஸ்ட் 21: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசின் "செவாலியே' விருது அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 22: பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கி சுடுதல் வீரர் ஜீது ராய் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை அறிவித்தது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com