வங்கியில் பணிபுரிய விரும்புபவரா நீங்கள் - இதோ... உங்களுக்கான 3247 அதிகாரி பணியிடங்கள்!

வங்கிகளில் வேலை செய்வதே தனது ஒரே நோக்கம் என்ற கொள்கை நோக்கத்துடன் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக
வங்கியில் பணிபுரிய விரும்புபவரா நீங்கள் - இதோ... உங்களுக்கான 3247 அதிகாரி பணியிடங்கள்!

வங்கிகளில் வேலை செய்வதே தனது ஒரே நோக்கம் என்ற கொள்கை நோக்கத்துடன் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளான 20 வங்கிகளில் புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐபீபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 247 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த அருமையானதொரு வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

இதுகுறித்த விரிவான விவரம் வருமாறு

வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபீபிஎஸ்)’, தற்போது 20 பொதுத்துறை வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 20 வங்கிகளில் புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 3247

பணியிடம்: இந்தியா முழுவதும்.

பணி மற்றும் வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

Sr. NoParticipating OrganizationSCSTOBCURTotal
1Allahabad Bank7531118223447
2Andhra Bank281553104200
3Bank of Baroda00000
4Bank of India281553104200
5Bank of Maharashtra00000
6.Canara Bank12862178532900
7Central Bank of India281553104200
8Corporation Bank00000
9Dena Bank00000
10IDBI Bank00000
11Indian Bank00000
12Indian Overseas Bank00000
13Oriental Bank of Commerce452281152300
14Punjab National Bank6030108202400
15Punjab & Sind Bank1582750100
16Syndicate Bank00000
17UCO Bank00000
18Union Bank of India6030108202400
19United Bank of India1582750100
20Vijaya Bank00000
Total48223680617233247

வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 20.07.1987 - 01.07.1997க்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர், மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600 ஆம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 06.08.2017 அன்று தொடங்குகிறது.

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 26.08.2017.

மேலும் விரிவான விவரங்களை

என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com