விமான நிறுவனத்தில் 111 சூப்பர்வைசர், பொறியாளர் வேலை

இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர்இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்புகளில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர்இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்புகளில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL) . பொறியியல் சார்ந்த பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் சூப்பிரவைசர் பணிக்கு 85 பேரும், மற்றொரு அறிவிப்பின்படி ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் பணிக்கு 26 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Assistant Supervisor

காலியிடங்கள்: 85

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி ஓபிசி, எஸ்டி, எஸ்டி.பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்.சி.-ஐ.டி, ஐ.டி அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், டேட்டா என்ட்ரி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்து, 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் தேதி: 20.09.2017 நடைபெறும். தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் ஏர்இந்தியா இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2017

மேலும் இதுகுறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/501_1_ASSTT_SUPERVISOR_ON_FTE_BASIS.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


பணி: Aircraft Maintenance Engineers

காலியிடங்கள்: 26

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி ஓபிசி, எஸ்டி, எஸ்டி.பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: டி.ஜி.சி.ஏ. லைசென்சு பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணிகள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
AIR INDIA ENGINEERING SERVICES LIMITED,
NEW AVIONICS COMPLEX,
OPPOSITE NEW CUSTOM HOUSE, IGI AIRPORT,TERMINAL 2,NEW DELHI - 110037.
Contact No. 011-25652442.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை Air India Engineering Services Limited என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகலாம்.

மேலும் இதுகுறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/500_1_AIRCRAFT_MAINTENANCE_ENGINEER_B1_ON_FTE_BASIS.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com