தமிழக அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 1058 விரிவுரையாளர் வேலை: டிஆர்பி அறிவிப்பு

2017-2018 ஆம் ஆண்டிற்கான பல்தொழில் (Polytechnic) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான (பொறியியல் மற்றும் பொறியியல்
தமிழக அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 1058 விரிவுரையாளர் வேலை: டிஆர்பி அறிவிப்பு


2017-2018 ஆம் ஆண்டிற்கான பல்தொழில் (Polytechnic) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கு) நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியானவர்களிடமிருந்து 11.08.2017 பிற்பகல் 11.59 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விரிவுரையாளர் (பொறியியல், பொறியியல் அல்லாத துறை)

மொத்த காலியிடங்கள்: 1058

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + கல்வி தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறையாமல் சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 இதனை இணைவழி மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  WWW.TRB.TN.NIC.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்குரிய trbonlineexams.in/polytechnic இணைப்பினை பயன்படுத்தி (ஏற்கனவே 16.06.2017 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி விண்ணப்பம் செய்தவர்கள் தவிர) இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சர்பார்ப்பின்போது தகுதிக்கான மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு: 16.09.2017 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு அஞ்சல் வழியாக எவ்வித கடிதமும் அனுப்பப்படமாட்டாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://trb.tn.nic.in/POL2017/28072017/Notification-Tamil.pdf என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com