கடலோர காவல்படையில் நேவிக் பணி

இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமானது இந்தியன் கோஸ்ட் கார்டு. இந்த படைப்பிரிவு கடற்கரை

இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமானது இந்தியன் கோஸ்ட் கார்டு. இந்த படைப்பிரிவு கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-02/2017 பயிற்சியில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சியுடன் கூடிய பணியான இதில் சேருவதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடமிருந்து இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 01.10.1995 மற்றும் 30.09.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களிலாவது 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.

உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப் படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் குறைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகிய வற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்ரகள் பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் வைத்திருப்பது அவசியம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 3 பிரிண்ட் அவுட் அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை கொண்டுச் செல்ல வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2017

மேலும், முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள www.joinindian coastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com