நபார்டு வங்கியில் வேலை: ஜூலை 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 91 உதவி மேலாளர்
நபார்டு வங்கியில் வேலை: ஜூலை 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 91 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 91

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistnat Manager in Grade A (Rural Banking Service)
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (RDBS) Agriculture - 08
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 - 30குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 19.07.2017
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/27/NABARD_Asst_Manger_in_Grade_A_Recruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com