ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: தமிழக விளையாட்டுகள்

உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த மனம் மகிழ்ச்சியில் திளைக்க துணைபுரிவது - விளையாட்டுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: தமிழக விளையாட்டுகள்

- உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த மனம் மகிழ்ச்சியில் திளைக்க துணைபுரிவது - விளையாட்டுகள்
- பழைமை வாந்த ஆடவர் விளையாட்டுகள் - மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், நீரில் மூழ்கி மணல் எடுத்தல்
- பண்டைய பெண்கள் விளையாடிய விளையாட்டுகள் எவை? - வட்டாடுதல், கழங்கு, அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல்
- மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் எத்தகைய விளையாட்டுகளாக உள்ளன - அக விளையாட்டுகள்
- விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுதல்
- ஓரினத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துவன - விளையாட்டுகள்.
- காளையின் வாலைப் பிடித்தால் தாழ்வு என்பது யார் கொள்கை? - தமிழர்
- ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே ஏற்பட்ட வீர விளையாட்டைப் பற்றிக் கூறும் நூல் - புறநானூறு
- முல்லை நிலத்தில் நடைபெற்ற வீர விளையாட்டு - ஏறுதழுவுதல்
- "ஓடி விளையாடு பாப்பா" என்று பாடியவர் - பாரதியார்
- சிற்றூர் சிறுவர் விளையாட்டுகள் எவை? - பம்பரம், கிளித்தட்டு, உப்பு - விளையாட்டு, கள்ளன் காவலன், காவலன், கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்து விளையாட்டு, ஒற்றையா, இரட்டையா, நீச்சல்
- சிற்றூர் சிறுமியர் விளையாட்டுகள் எவை? -  பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கால், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம்
- மதுரையில் யானைப்போர் காண்பதற்கான திடலாக இருந்த இடம் - தமுக்கம் மைதானம்.
- வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்னும் பெயர் அமைந்த சோழநாட்டின் பழைய தலைநகரம் - உறந்தையூர்
- தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
- அரங்கு இழைத்து (கட்டம் வரைந்து) நெல்லிக் காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் - வட்டாடுதல்
- உலக அரங்கில் தனியிடம் கிடைத்துள்ள தமிழரின் வீர விளையாட்டு - கபடு (சடுகுடு)
- இன்று ஜல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்ற பண்டைய விளையாட்டு - ஏறுதழுவுதல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com