கடல் சார்ந்த சர்வேயர், மண் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 19 உதவி மண் பாதுகாப்பு அதிகாரி, அறிவியல் அதிகாரி மற்றும் கடல் சார்ந்த சர்வேயர் மற்றும் பொது
கடல் சார்ந்த சர்வேயர், மண் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 19 உதவி மண் பாதுகாப்பு அதிகாரி, அறிவியல் அதிகாரி மற்றும் கடல் சார்ந்த சர்வேயர் மற்றும் பொது துணை இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Soil Conservation Officer -  01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400
வயதுவரம்: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: வேளாண் பொறியியல் துறையில் வேளாண்மை பொறியியல் பட்டம் அல்லது விவசாய வேதியியல் அல்லது மண் விஞ்ஞானம் அல்லது வேளாண் விரிவாக்கம் அல்லது வேளாண் பொருளாதாரம் அல்லது வேளாண் தாவரவியல் அல்லது தாவரவியல் அல்லது வனவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Scientific Officer -13 
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100 
வயதுவரமப்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: வேதியியல், நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது வேதியியல் டெக்னாலஜி அல்லது வேதியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Nautical Surveyor-cum-Deputy Director General - 05 
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.7600
வயதுவரமப்பு: 50க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் வெளிநாட்டுப் பயண கப்பல் துறையில் முதுகலைசான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. எஸ்டி, எஸ்டி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Advt_No_20_2017_Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com