மத்திய அரசின் 414 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய பாதுகாப்பு துறைகளில் காலியாக உள்ள 414 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வுக்கான அறிவிப்வை மத்திய பணியாளர்
மத்திய அரசின் 414 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய பாதுகாப்பு துறைகளில் காலியாக உள்ள 414 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வுக்கான அறிவிப்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிக்கை எண்.2/2018. CDS-I தேதி: 08.11.2017 

மொத்த காலியிடங்கள்: 414

பணி: Combined Defence Services Examination (CDS)(I) 2018

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Indian Military Academy, Dehradun - 100 
வயதுவரம்பு: 02.01.1995 - 01.01.2000க்குள் பிறந்திருக்க வேண்டும்.

2. Indian Naval Academy, Ezhimala—Course - 45 
வயதுவரம்பு: 02.01.1995 - 01.01.2000க்குள் பிறந்திருக்க வேண்டும்.

3. Air Force Academy, Hyderabad—(Pre-Flying) - 32 
வயதுவரம்பு: 02.01.2019 தேதியின்படி 20-24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1995 - 01.01.1999க்குள் பிறந்திருக்க வேண்டும்.

4. Officers’ Training Academy, Chennai (Madras) -  225 
வயதுவரம்பு: 02.01.1994 - 01.01.2000 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

5. Officers Training Academy, Chennai—23rd SSC Women (Non-Technical) - 12
வயதுவரம்பு: 02.01.1994 - 01.01.2000க்குள் இருந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டம், கணிதம், இயற்பியல் பாடங்களுடன் கூடிய +2 தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notification_CDSE_I_2018_Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com