கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

கல்பாக்க அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 14 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம்

கல்பாக்க அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 14 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம் மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பணி: சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் (பிரிவுகள்:  ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்)

கல்வித்தகுதி: ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல் துறைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், இண்ட்ஸ்ரூ மென்டேஷன் துறைகளில் விண்ணப்பிப்பவர்கள்  60 சதவீத மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.11.2017. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bhavini.nic.in/writereaddata/Careers/45.pdf  என்ற இணையதள அறிவிப்வை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com