ஈரோடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் வேலை

ஈரோடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள இளநிலை நிர்வாக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு

ஈரோடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள இளநிலை நிர்வாக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இளநிலை நிர்வாக உதவியாளர்
காலியிடங்கள்: 3
தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை நிர்வாக உதவியாளர் (கணிப்பொறி இயக்குபவர்)
காலியிடங்கள்: 1
தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்கும் (LMV) வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: நீதிபதி/தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், ஈரோடு} 638001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.11.2017.

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20District%20Legal%20Service_0.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com