நாமக்கல் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் வேலை

நாமக்கல் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

நாமக்கல் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை நிர்வாக உதவியாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை நிர்வாக உதவியாளர் (கணிப்பொறி இயக்குபவர்)
காலியிடங்கள்: 1
தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகனங்களை (LMV) ஓட்டும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அனைத்துப் பதவிகளுக்கும் குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்ச வயது - பொது பிரிவினருக்கு 30, எம்.பி.சி அல்லது ஓபிசி பிரிவினருக்கு -32, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chairman/Principal District Judge, District Legal Services Authority, Combined Court Buildings, Namakkal – 637003.

மேலும் விவரங்களுக்கு: http://ecourts.gov.in/sites/default/files/Publication_03-11-2017.pdf  என்ற இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.11.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com