விண்ணப்பித்துவிட்டீர்களா..?   7883 வங்கி கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

 வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து
விண்ணப்பித்துவிட்டீர்களா..?   7883 வங்கி கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 883 கிளார்க் பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 12-ஆம் தேதி வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) அறிவித்திருந்தது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று செவ்வாய்கிழமை (அக்.3) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.

தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்வை (சிடபுள்யூஇ.-7) ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது.

மொத்த காலியிடங்கள்: 7,883. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1277 இடங்கள் உள்ளன.

பணி: Clerks -VII

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டப்படிப்புடன் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  

வயது வரம்பு: 1.9.2017 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.9.1989 மற்றும் 1.9.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இருகட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐபிபிஎஸ் அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதல்நிலை தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

முதன்மை தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி

மாநிலங்கள் வாரியான காலியிங்கள் விவரம்:
1. ஆந்திரப் பிரதேசம் - 485
2. அருணாச்சல பிரதேசம் - 08
3. அசாம் - 109
4. பீகார் - 227
5. சண்டிகர் - 34
6. சத்தீஸ்கர் - 118
7. தத்ரா & நகர் ஹவேலி - 07
8. டமன் & டையூ - 08
9. தில்லி - 272
10. கோவா - 41
11. குஜராத் - 487
12. ஹரியாணா - 175
13. ஹிமாச்சல பிரதேசம் - 73
14. ஜம்மு & காஷ்மீர் - 34
15. ஜார்கண்ட் - 127
16. கர்நாடகா - 554
17. கேரளா - 217
18. லட்சத்தீவுகள் - 02
19. மத்தியப் பிரதேசம் - 290
19. மகாராஷ்டிரா - 775
20. மணிப்பூர் - 11
21. மேகாலயா - 17
22. மிசோரம் - 03
23. நாகலாந்து - 12
24. ஒடிசா - 196
25. புதுச்சேரி - 46
26. பஞ்சாப் - 401
27. ராஜஸ்தான் - 344
28. சிக்கிம் - 11
29. தமிழ்நாடு - 1277
30. தெலுங்கானா - 344
30. திரிபுரா - 18
21. உத்தரப் பிரதேசம் - 665
32. உத்தரகண்ட் - 78
33. மேற்கு வங்கம் - 417

ஆன்லைனில் இன்றே கடைசி நாளாக உள்ளதால் விண்ணப்பிக்க தவறியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறவும் 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 2.12.2017, 3.12.2017, 9.12.2017, 10.12.2017

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 21.1.2018

மேலும் முழுமையான விவரங்களை www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com