இளைஞர்களுக்கு அழைப்பு! கடலோர காவல்படையில் வேலை

கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் கடலோர காவல்படையில் நேவிக் (டொமஸ்டிக் பிராஞ்ச்) -01/2018 பயிற்சி சேர்க்கையில்
இளைஞர்களுக்கு அழைப்பு! கடலோர காவல்படையில் வேலை

கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் கடலோர காவல்படையில் நேவிக் (டொமஸ்டிக் பிராஞ்ச்) -01/2018 பயிற்சி சேர்க்கையில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு முடித்த இளைஞர்கள் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாத ஆண்கள் பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 01.04-1996 மற்றும் 31.03.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்கப்படும். 

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், மார்பளவு 5 செ.மீட்டர் விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையும்,   நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவில் பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு அழைக்கப்படும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com