டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் என்ஜினியர் வேலை

அனைவராலும் சுருக்கமாக ஐஓசிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  ‘நான்-எக்சிகியூட்டிவ்’ தரத்திலான 45 ஜூனியர்
டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் என்ஜினியர் வேலை

அனைவராலும் சுருக்கமாக ஐஓசிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  ‘நான்-எக்சிகியூட்டிவ்’ தரத்திலான 45 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Jr. Engineering Assistant-IV (Production)  A1 Chemical -15 
2. Jr. Engineering Assistant-IV(Electrical)  A2 Electrical - 07 
3. Jr. Engineering Assistant-IV (Mechanical)  A3 Mechanical -13 
4. Jr. Engineering Assistant-IV (Instrumentation)  A4 Instrumentation - 09 
5. Jr. Engineering Assistant-IV (Fire & Safety)  A5 Fire & Safety - 01 

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி. அறிவியல் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை கணினிப் பிரதி எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து  DGM(HR), HR Dept, Administration Building, Mathura Refinery, Mathura, Uttar Pradesh-281005 என்ற அஞ்சல்  முகவரிக்கு 7.11.2017-க்குள் சென்றடைய வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2017

எழுத்துத் தேர்வு முடிவு 15.15.2017 மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதியான முடிவு 15.01.2018 தேதிகளில் வெளியிடப்படலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/ALL-INDIA-AD(OCT'17)-FINAL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com