ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 5,813 பயிற்சிப் பணிகள்: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தின் சென்னை
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 5,813 பயிற்சிப் பணிகள்: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தின் சென்னை உள்ளிட்ட 22 கிளை நிறுவனங்களில் 5813 பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிளைகள் வாரியாக காலியிடங்கள் விவரம்: 
1. Agartala    Apprentice – 187
2. Ankeleshwar - 486
3. Ahmedabad - 506
4. Bokaro - 47    
5. Cambay - 115     
6. Chennai    - 138     
7. Dehradun - 367     
8. Delhi - 284     
9. Goa - 28    
10. Jorhat - 224    
11. Kakinada -104     
12. Hazira Plant -181
13. Jodhpur - 49    
14. Karaikal - 275     
15. Kolkata - 78    
16. Mehsana - 458     
17. Mumbai - 560    
18. Nazira - 782    
19. Rajahmundry - 385
20. Silchar - 78    
21. Uran -120    
22. Vadodara    - 280

வயதுவரம்பு: 1.11.2017 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின்னர் வர்த்தகம், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
     
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அந்தந்த  கிளையின் எச்.ஆர்.பிரிவு அதிகாரியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com