இந்திய ரிசர்வ் வங்கி சட்ட ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்ட ஆலோசர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 25ல்
இந்திய ரிசர்வ் வங்கி சட்ட ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்ட ஆலோசர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 25ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை செப்டம்பர் 5க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 05

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Legal Consultant in Grade ‘F’ (Legal Adviser) - 02
பணி: Legal Consultant in Grade ‘C’/’D’ (Assistant/Deputy Legal Adviser) - 03

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அல்லது ஒரு பெரிய வங்கி, நிதி நிறுவனம், சட்டப்பூர்வ நிறுவனம் அல்லது மத்திய, மாநில அரசு அல்லது ஒரு துணைப் பங்குதாரர் ஆகியவற்றின் சட்ட துறைகளில் ஒரு சட்ட ஆலோசகராக பணி அனு.பவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 45 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சரியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:  www.rbidocs.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ALO20072017266DFB5BEEC9477588DEBB6E50F79782.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com