ராணுவ அகாதெமியில் அதிகாரி வேலை: செப்.8க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவ அகாதெமியில் காலியாகவுள்ள அதிகாரி பணியிடங்கள் யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படவுள்ளதால் விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என


இந்திய ராணுவ அகாதெமியில் காலியாகவுள்ள அதிகாரி பணியிடங்கள் யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படவுள்ளதால் விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணுவ மிலிட்டரி அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படை அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ஜினியரிங்  பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விமானப்படை அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு அல்லது என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

மேலும் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவு திறன் தேர்வு, ஆளுமை திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் w‌w‌w.‌e‌p‌s​c‌o‌n‌l‌i‌n‌e.‌n‌i​c.‌i‌n என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் தவிர்த்து மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ. 200 செலுத்தி பகுதி 2 விண்ணப்பத்தை செப். 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌y‌m‌y.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம்.

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளதால் அவர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04366-220210 என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com