டெக்னீஷியன் பணியிடங்களுக்கு சென்னையில் நாளை நேர்முகத் தேர்வு

சென்னையில் நாளை சனிக்கிழமை நடைபெறும் டெக்னீஷியன்களுக்கான நேர்முகத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டெக்னீஷியன்கள்

சென்னையில் நாளை சனிக்கிழமை நடைபெறும் டெக்னீஷியன்களுக்கான நேர்முகத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டெக்னீஷியன்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பணிபுரிய 50 டெக்னீஷியன்கள் தேவைப்படுகிறார்கள். டெக்னீஷியன்கள் ஐடிஐ, ஐடிசி, ஓராண்டு ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டிப்ளமோ தகுதியுடன் ஆட்டோமொபைல் தொழிலில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

இதேபோல, பணி அனுபவம் இல்லாத 50 பயிற்சி டெக்னீஷியன்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ரூ.6 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 5 ஏரியா மேனேஜர் பணியிடங்களுக்கு இளங்கலைப் பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், 5 பிராண்ட் ஆபீஸ் பணியாளர் பணிக்கு இளங்கலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்.  இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். காலியாக உள்ள ஒரு கணக்காளர் பணிக்கு 5 வருட பணி அனுபவத்துடன் இளங்கலை வணிக பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் டெக்னீஷியன்களுக்கு அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியமும், பயிற்சி டெக்னீஷியன்களுக்கு இலவச இருப்பிடம், பயணப்படி, பயணச் செலவினம், இலவச செல்லிடப்பேசி இணைப்பு வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை omctndrs@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மேலும், விவரங்களுக்கு  www.omcmanpower.com என்ற வலைதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு சனிக்கிழமை (செப்டம்பர் 9) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலை, நெ.42-ல் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உள்நாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு மூலம் நடத்தப்படும் இந்த நேர்முகத் தேர்வுக்கு சேவைக் கட்டணம் இல்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com