கடலூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடலூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் W.P.NO. 33647/2007 & 32836/2007, தேதி 29.04.2008-இல் அளித்த உத்தரவின்படி அரசு ஆணைக்குட்பட்ட கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிருந்தும் இதர நபர்கள் அதற்குரிய விண்ணப்படிவத்தில் சுய சான்றிடப்பட்ட உரிய சான்றுகளுடன் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாவட்ட நீத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை நேர்முக தேர்வுக்கு அனுப்புமாறு கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பணி: Computer Operator - 05
சம்பளம்: மாதம் 5200 - 20200 PBIA+ GP+280
தகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
 
பணி: Typist (Purely on temp. basis under rule 16 a (i) of TNJMS) - 20
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 PBIA + GP + 2400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Bailiff - 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 PBIA + GP + 2400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணி: Junior Bailiff - 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 PBIA + GP + 2200
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பணி: Xerox Operator - 14
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 PBIA + GP + 1650
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதற்கு 6 மாதங்களுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant - 22
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 PBIA + GP + 1300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பணி: Night Watchman - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 PBIA + GP + 1300
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Full Time Masalchi - 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 PBIA + GP + 1300
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sweeper - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 PBIA + GP + 1300
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கடலூர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%202017%20Tamil_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com