விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: 150 நிறுவனங்களை அழைக்க ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அக்டோபர் மாதம் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: 150 நிறுவனங்களை அழைக்க ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அக்டோபர் மாதம் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க 150 தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வரும் அக்டோபர் மாதம் இறுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில், வேலைவாய்ப்பு முகாமை சிறப்பாக நடத்த ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களையும் அழைக்க ஏற்பாடு செய்தல், 50,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பற்ற, வேலை தேடும் நபர்களை முகாமில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.

10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலை தேடும் நபர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாமை சிறப்புற நடத்தவேண்டும், திறன் பயிற்சி பெற விருக்கும் இளைஞர்கள் பயனடையும் வகையில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களை முகாமில் பங்குபெறச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மணி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளார் ராஜகணேஷ், மகளிர் திட்டம் உதவித் திட்ட அலுவலர் கமல்ராஜ், காவல்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com