விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவத்தில் குரூப் 'சி' வேலை

ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவத்தில் குரூப் 'சி' வேலை

ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Civilian Motor Driver - 01
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அதனுடன் மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Technician (Semi-Skilled) - 07
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Multi Tasking Staff (Sanitary) - 01
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை The Commandant Central Proff Establishment, Itarsi என்ற பெயருக்கு ஐபிஓ -ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10203_11_0034_1718b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று 25 X 10 செ.மீ அளவுள்ள தபால் கவர், ஐபிஓ, 4 புகைப்படங்கள் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commandant Central Proff Establishment (DGQA), 
Min.of Def.Production, 
Gov.of India,
Itarsi (MP) - 461 114

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com