ஐ.ஏ.எஸ். தேர்வில் குடும்பத்தலைவி அனு குமாரி தேசியளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி அனுகுமாரி(31) 
ஐ.ஏ.எஸ். தேர்வில் குடும்பத்தலைவி அனு குமாரி தேசியளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை

புதுதில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி அனுகுமாரி(31) 
தேசியளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்துகிறது. 980 பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகளை மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெள்ளிக்கிழமை (ஏப் 27) வெளியிட்டது.

இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அனு குமாரி என்ற குடும்பத்தலைவி இரண்டாவது முயற்சியிலேயே, தேசியளவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் இவர் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பையும், நாகபுரியில் உள்ள ஐஎம்டி கல்லூரியில் எம்பிஏ படிப்பையும் முடித்துள்ளார்.  

தனது வெற்றி குறித்து அனு குமாரி கூறுகையில், ஐ.ஏ.எஸ் ஆவதே தனது முதல் விருப்பம். தனது வெற்றி எனது குடும்பத்தில் இருந்து கிடைத்த ஆதரவுக்கான வெகுமதியாக இருப்பதாகவும், எனக்கு முழு ஆதரவு அளித்த என் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். 

என் நாட்டு மக்களுக்கு எனது சேவைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் 10 மணி முதல் 12 மணி வரை கடுமையாக உழைத்து படித்தேன். வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் குறிக்கோளில் தீர்க்கமாக இருக்க வேண்டும். கடந்த 2016 முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினேன். அப்போது வெறும் 1 மதிப்பெண்ணில் கட் ஆஃப் இலக்கை நழுவவிட்டதால் முதல் முயற்சியில் வெற்றிபெற முடிய வில்லை. 

ஆனாலும் என்னால் அடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்ற உறுதியுடன் தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்காக கடுமையாக உழைத்தேன். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக படிப்பில் முழு கவனம் செலுத்தினேன். அதன் விளைவாக யு.பி.எஸ்.சி தேர்வில் தேசியளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்று அனு குமாரி கூறினார். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என கூறும் அனு குமாரிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்பத்தையும் பொறுப்போடு கவனித்துக் கொண்டு, யு.பி.எஸ்.சி தேர்வில் சாதனையை நிகழ்த்திக் காட்டிய அனுவுக்கு ஒரு சபாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com