ரயில்வேயில் 32,000 புதிய பணியிடங்கள்'

ரயில்வேயில் 32,000 புதிய காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையும் சேர்த்து ரயில்வேயில் இந்த ஆண்டு நிரப்பப்படும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1,32,646 ஆக உயர்ந்து
ரயில்வேயில் 32,000 புதிய பணியிடங்கள்'


ரயில்வேயில் 32,000 புதிய காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையும் சேர்த்து ரயில்வேயில் இந்த ஆண்டு நிரப்பப்படும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1,32,646 ஆக உயர்ந்துள்ளது.

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரயில்வே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளிக்கையில்,  ரயில்வே ஏற்கனவே அறிவித்திருக்கும் 99,000 பணியிடங்களில் 62,907 பதவிகள் தொடக்கநிலை பிரிவைச் சேர்ந்தவை. 32,000 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வியாழக்கிழமை அன்று வெளியிட்டோம்.

இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,32,646 ஆக உயர்ந்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் நிரந்தர பணியிடங்கள் என்று பதிலளித்தார்.

ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த மற்றொரு கேள்விக்கு, வேலையில் உள்ள கடினத்தன்மை காரணமாக பெண்கள் அதிக அளவில் ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில்லை. எனினும் ரயில்வேயில் அனைத்து வேலைகளிலும் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கணிணி வழி தேர்வு மூலமாக தான் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன்னர் ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது . ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com