மத்திய, மாநில அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் 309 உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்


தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் 309 உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்புக்குப் பிறகு, நேரடி வழியில் பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் டிப்ளமோ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் பிஈ அல்லது பி.டெக் முடித்தவர்களிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பதற்கு வரும் 10-ஆம் தேதி கடைசியாகும். 

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் மற்றும் 9 இளநிலை டிராக்டர் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குகனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அரசுப் பல்கலைக்கழகம்/ அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ 10 அல்லது 2 ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி உச்சபட்ச வயதுவரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500; மற்றவர்கள் ரூ.750 கட்டணமாக The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயரில் கோயம்புத்தூரில் செலுத்தும் விதத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வரைவோலை எடுக்க வேண்டும்.
தகுதியானவர்கள் www.dri.tnausms.in என்ற வலைதளத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் விண்ணப்பத்தைப் பிரதியெடுத்து, தேவையான நகல் சான்றிதழ்கள், விண்ணப்பக் கட்டணத்துக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து, பதிவு தபால்/ கூரியர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore - 641 003.
மேலும் விவரங்களுக்கு: www.dri.tnausms.in/Reports/DRIVER%20Recruitment-%202018.pdf, www.dri.tnausms.in/Reports/JUNIOR%20TRACTOR%20DRIVER%20Recruitment%20-%202018.pdf ஆகிய இணையதளங்களைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 13-08-2018.

பெல் நிறுவனத்தில் வேலை
பதவி: Contract Engineer (Electronics)
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: கணிணி அறிவியல்/ தகவல்தொழில்நுட்பம் துறையில் பி.ஈ./ பி.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
முன் அனுபவம்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் டெலப்மெண்ட்/ வெப் அப்ளிகேஷன் டெஸ்டிங் பணிகளில் இரண்டு ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற வலைத்தளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.bel-india.in/Documentviews.aspx?fileName=application-for-the-post-of-contract-engineers-for-MilCom-SBU-31-7-18.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 15-08-2018.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை
பதவி: லேத் ஆபரேட்டர்
காலியிடம்: 1 
பதவி: மெஷினிஸ்ட்
காலியிடம்: 1 
பதவி: வெல்டர்
காலியிடங்கள்: 14
பதவி: எலெக்ட்ரிசியன்
காலியிடங்கள்: 8
பதவி: எலெக்ட்ரானிக் மெக்கானிக்
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிறகு, பிளஸ் டூ-வில் அறிவியல் & கணித பாடப்பிரிவு எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் 
வயது வரம்பு: 16 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற வலைதளத்தில் இருந்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Manager (HRM), HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam-603 102. 
மேலும் விவரங்களுக்கு: www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_MAPS_HRM_TA_09jul2018_01.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-8-2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com