உங்களுக்கான வாய்ப்பு இதுதானா..? தெற்கு ரயில்வேயில் 328 வேலைவாய்ப்புகள்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நர்சிங் சூப்பிரண்டன்ட் மற்றும் சுகாதார
உங்களுக்கான வாய்ப்பு இதுதானா..? தெற்கு ரயில்வேயில் 328 வேலைவாய்ப்புகள்


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நர்சிங் சூப்பிரண்டன்ட் மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலி.யிடங்கள்: 328

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Safaiwala -257
பணி: Nursing Superintendent - 35 Posts
பணி: Health & Malaria Inspector - 24 Posts
பணி: Haemo Dialysis Technician - 01 Post
பணி: Extension Educator - 01 Post
பணி: Radiographer - 01 Post
பணி: Pharmacist - 01 Post
பணி: ECG Technician - 01 Post
பணி: Laboratory Assistant. Gr. II - 07 Posts

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 01.01.2019 தேதியின்படி 33க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, நர்சிங்-மிட் வைபரி படித்தவர்கள், துணை மருத்துவ பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் பி.எஸ்.சி., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in என்ற இணையத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_ParaMedical_Categories_ContractualBasis.pdf மற்றும் http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_Safaiwala_Categories_ContractualBasis.pdf ஆகிய இணையதள பக்க அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com