உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Court Assistant (Technical Assistant cum-Programmer)

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.44,900

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

தகுதி: Computer Science, Information Technology பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளநிலை பட்டத்துடன் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, டெக்னிக்கல் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.supremecourtofindia.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது "Application for the post of court Assistant (Technical Assistant cum-Programmer)" என்று குறிப்பிட வேண்டும்.

Registrar (Admin.I), Supreme Court of India, Tilak Marg, New Delhi - 110 201

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.2.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.supremecourtofindia.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com