காஷ்மீரில் 37 துறைகளில் 41, 147 காலியிடங்கள்

ஜம்மு-காஷ்மீர் அரசில் 37 துறைகளில் 41,147 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் அரசில் 37 துறைகளில் 41,147 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு}காஷ்மீரில் 37 துறைகளில் 6034 அதிகாரிகள் (கெஜட்டட் அந்தஸ்து) பணியிடங்களும், 35,113 பணியிடங்களும் (கெஜட்டட் அல்லாத) காலியாக உள்ளன.

கல்வித் துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. பொது நிர்வாகத் துறையில் 500}க்கும் மேற்பட்ட
காலியிடங்களும், வேளாண் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களும் உள்ளன.

இதேபோல், பொதுப் பணித் துறை, சட்டம், நீதி மற்றும் சட்டப் பேரவை விவகாரங்கள் துறை, தகவல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பத் துறை, தொழில் மற்றும் வர்த்தத் துறை, நிதித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தோட்டக்கலை துறை, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com