தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நிறைவு

பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நிறைவு

பல்வேறு துறைகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 6,962 மையங்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டன. புதிய முயற்சியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் ஆகிய விபரங்கள் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதன் மூலம், தவறான பதிவெண் எழுதுபவர்களுக்கு மதிப்பெண் குறைக்கும் நடவடிக்கை தவிர்க்கப்படும். மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால அவகாசம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மைய கண்காணிப்பு மற்றும் இரத பணிகளுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு நடவடிக்கைகள் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எளிதில் சென்று வர போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிக்கு முடிவடைந்துள்ளது. இதில், 9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 20 லட்சம் பேரில், 3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com